தமிழ்ப் பெருங்களஞ்சியத் திட்டம்
Jump to navigation
Jump to search
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பரப்புரை அலகான கணித்தமிழ்ப் பேரவை உருவாக்கிவரும் பல்துறைக் களஞ்சியமே தமிழ்ப் பெருங்களஞ்சியம் ஆகும். அனைத்துத் துறைகளிலும், தமிழ் உள்ளடக்கங்களை கலைக்களஞ்சிய வடிவில் உருவாக்குவது இத்திட்டத்தின் முதன்மைப்பணி ஆகும். இத்திட்டம் இணையப் பரப்பில் தமிழை வளப்படுத்தவும், வலுப்படுத்தவும் விரும்பும் தன்னார்வலர்களின் உறுதுணையுடன் செயல்படுகின்றது. தமிழ்ப் பெருங்களஞ்சியத்தில் உள்ள ஆக்கங்கள், படைப்பாக்கப் பொதுமங்கள் (CC BY-SA 4.0) என்னும் உரிமத்தின் கீழ் அளிக்கப்படுகின்றன.
தன்னார்வலர்கள் தங்களின் விருப்பத்துறையில் புதிய கட்டுரைகளை உருவாக்கலாம், முன்னமே உள்ள கட்டுரைகளைத் திருத்தி செம்மைப்படுத்தலாம், கட்டுரைகளுக்குப் பொருத்தமான ஒளிப்படங்கள், காணொலிகள், ஒலிக்கோப்புகள், அசைவூட்டப் படங்கள் போன்றவற்றினைச் சேர்க்கலாம்.